வரசித்தி விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேகம்!
ADDED :4251 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் காந்திநகர் வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டுவிழாவை முன்னிட்டு 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் சங்குகளில் இருந்த புனித நீரால் விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் தீபராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் கவுன்சிலர் லட்சுமி, பெருமாள், வெங்கடேசன் கலந்து கொண்டனர்.