ஸ்ரீசத்யசாயி சேவா சமிதி சொற்பொழிவு
ADDED :4054 days ago
வெள்ளக்கோவில் : வெள்ளக்கோவில் ஸ்ரீசத்யசாயி சேவா சமிதி சார்பில், ஸ்ரீசத்யசாயி ஸப்தாஹ தேவாமிர்தம் ஆன்மிக சொற்பொழிவு, வரும் 4ம் தேதி வரை, வெள்ளக்கோவில் எஸ்.கே.ஆர்., தங்கமாளிகை மஹாலில், தினமும் மாலை 5.30 முதல் 8.00 மணி வரை நடக்கிறது. இன்று (2ம் தேதி) மாலை 5.30 மணிக்கு கடவுள் சம்பந்தமே மகிழ்ச்சி தரும் என்ற தலைப்பிலும், நாளை (3ம் தேதி) மதங்களின் ஒற்றுமை என்ற தலைப்பிலும், 4ம் தேதி ஸ்ரீசத்யசாயி நிறுவனங்களின் புனிதம் மற்றும் சிறப்பு குறித்து ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதில் பங்கேற்க, வெள்ளக்கோவில் ஸ்ரீசத்யசாயி சேவா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.