தண்ணீரை பீச்சியடித்து விநாயகர் சிலை கரைப்பு!
ADDED :4054 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரையில் விநாயகர் சிலைகளை கரைத்தனர். மூங்கில்துறைப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது. தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வந்த சிலைகளை கரைக்க ஆற்றில் தண்ணீர் இல்லை. இதனால் ஆற்றின் அருகே உள்ள கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை பாய்ச்சி சிலைகளை கரைத்தனர். வடபொன்பரப்பி போலீஸ் மற்றும் மூங்கில்துறைப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.