உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னி மூல விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்

கன்னி மூல விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்

உடுமலை : உடுமலை, பெரியகோட்டை பகுதியில் உள்ள, கன்னி மூல கணபதி கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. உடுமலை, எஸ்.வி.மில் அடுத்த முத்துசாமி கவுண்டர் லே-அவுட்டில் அமைந்துள்ளது, கன்னி மூல கணபதி கோவில். கோவில் கும்பாபிேஷக விழா, ஆக., 30ம் தேதி அதிகாலை மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு, கோபுர கலசத்தை தொடர்ந்து, கன்னி மூல கணபதிக்கு மகா கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் அர்ச்சகர் கிரிவாசபகவதிசிவம் மற்றும் ஐயப்பன் கோவில் அர்ச்சகர் சுந்தரமூர்த்திசிவம் ஆகியோர் கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !