கருவலூர் கோவிலில் 7ல் கும்பாபிஷேகம்
ADDED :4052 days ago
அவிநாசி :திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, கருவலூர் மாரியம்மன் கோவில் கும்பாபி ஷேகம், வரும் 7ல் நடைபெறுகிறது. இதற்கான விழா, நாளை (செப்., 4) காலை 7.30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. வரும் 5ம் தேதி மாலை 6.00 மணிக்கு, யாகசாலையில் முதலாம் கால பூஜை, 6ம் தேதி காலை மற்றும் மாலையில் இரண்டாம், மூன்றாம் கால பூஜை நடக்கிறது. நிறைவு கால பூஜை, வரும் 7ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. அதன்பின், காலை 6.15 முதல் 7.15 மணிக்குள் மூலவ விமானம், ராஜகோபுரங்களுக்கும் மற்றும் மூலவர் சன்னதியில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சரவணபவன், அறங்கா வலர் குழு தலைவர் அர்ச்சுனன், அறங்காவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கசாமி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.