தர்ம முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4053 days ago
கடலாடி: கடலாடி கரிசல்குளத்தில் தர்ம முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாட்களாக நான்கு கால பூஜைகள் நடந்தன. காலை 9 மணியளவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றினர். கிராம தலைவர் கோவிந்தராஜ், கடலாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜெயச்சந்திரன் உள்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.