உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெட்டிக்குப்பம் கிராமத்தில் 4 கோவில்கள் கும்பாபிஷேகம்!

ரெட்டிக்குப்பம் கிராமத்தில் 4 கோவில்கள் கும்பாபிஷேகம்!

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் ரெட்டிக்குப்பத்தில் இன்று நான்கு கோவில்களில்
கும்பாபிஷேகம் நடக்கிறது. விக்கிரவாண்டி அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தில் செல்வ விநாயகர், ரேணுகா பரமேஸ்வரிஅம்மன், கங்கையம்மன் , பாலமுருகன், அய்யனாரப்பன் கோவில்கள் புதுப்பித்து இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கடந்த 1 ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி, மூன்று கால யாகசாலை பூஜைகள் முடிந்தது . இன்று காலை 5 மணிக்கு நான்காம்கால யாகசாலை பூஜை ஆரம்பமாகி காலை 8 மணிக்கு மஹாபூர்ணாஹூதி முடிகிறது. கடம் புறப்பாடு நடந்து காலை 8.15 மணிக்கு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், காலை 10.30 மணிக்குள் அனைத்து கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் கிரிஜா முரளிதரன் தலைமையில் விழா குழுவினர் முன்னின்று செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !