கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள் முளைப்பு!
ADDED :4081 days ago
பள்ளிப்பட்டு: கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவில் கோபுரத்தில், செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால், கோபுரத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவிலின், ஐந்து நிலை ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால், அதன் உறுதித்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். கோபுரத்தில் வாழ்ந்து வரும், புறாக்களின் எச்சத்தை அகற்றி சுத்தம் செய்யாததால், பொலிவிழந்து வரும் கோபுரம், அந்த எச்சத்தில் உள்ள விதைகளால் வளரும் செடிகளால், உறுதியையும் இழந்து வருகிறது. கோவில் கோபுரத்தில் உள்ள செடிகளை அகற்றி, சுத்தம் செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.