துன்பம் எதனால் வருகிறது திருச்சி கல்யாணராமன் விளக்கம்!
ADDED :4026 days ago
மதுரை :மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் ஆண்டாள்புரம் வசுதாரா விஸ்வாஸ் அரங்கில் திருச்சி கல்யாணராமனின் வில்லி பாரத தொடர் சொற்பொழிவு நடக்கிறது.கிருஷ்ணன் தூது என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:நாம் எப்போதும் இல்லை என்ற வார்த்தையை சொல்லக்கூடாது. தெரியாதவர்களுக்கு உணவளிப்பது தான் விருந்து. இந்த உலகத்தில் அனைவரும் இல்லாதவர்களே. கடவுள் ஒருவனே எல்லாம் இருப்பவன். உலகில் நம் சரீரத்தை மட்டும் காத்து, உண்டு வாழ்வது வாழ்க்கை இல்லை. இறைவனைத் தேடவேண்டும்.ஏனெனில் இந்த சரீரம் அழியக்கூடியது. இந்த வாழ்க்கை நிலையானது அல்ல. நாம் எவை மீது அதிக அன்பு, ஆசை கொள்கிறோமோ, அதனால் நமக்கு துன்பம் வரும். அதனால் இறைவனை தவிர எதிலும் பற்று இல்லாமல் வாழ்தல் வேண்டும். கடவுளிடம் எதையும் கேட்கத் தேவையில்லை. அவரே நம் தேவைகளை நிறைவேற்றுவார், என்றார்.