வேல்முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்!
ADDED :4050 days ago
காரைக்கால்: கோவில்பத்து காட்டுநாயக்கன் தெருவில் உள்ள வேல்முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காரைக்கால் ÷ காவில்பத்து காட்டுநாயக்கன் தெருவில் அருள்மிகு வேல்முருகன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த 5ம் தேதி முதல்காலம் பூ ஜைகளுடன் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை யஜமானர் சங்கல்பம் நவகிரஹ வழிபாடு,தேவதா பிரார்த்தனை, வாஸ்து சாந்தி,யாகபூஜைகம் தொடங்கியது.நேற்று முன்தினம் இரண்டாம் கால பூஜைகம் கோபுர கலச ஸ்தாபனம் மூலவருக்கு மருத்து சாத்துதல் நேற்று காலை 6 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருமுருகன் எம்.எல்.ஏ.,காட்டுநாயக்கன் விழாக்குழுவினர்கள் சிறப்பாக செய்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.