மகாலஷ்மி கோவில் சம்ப்ரோக்ஷணம்
ADDED :4049 days ago
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்குப் புதுச்சேரி சாலையில் உள்ள மகாலஷ்மி குபேர கோவிலில், சக்கரத்தாழ்வார் உற்சவர், அஷ்டலட்சுமி சொர்க்கவாசல் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 6ம் தேதி மாலை பகவத் அனுக்ரகம், மகாசங்கல்பம், அங்குரார்பணம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோபூஜை, விஸ்வரூபம், புண்ணியவாகனம், மகாலஷ்மி மூல மந்திரம் நடந்தது. 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு மற்றும் மகாசம்ப்ரோக்ஷணம் ஆலய அர்ச்சகர் வரதராஜன் பட்டாச்சாரியார் தலைமையில் நடந்தது. மாலை ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம், இரவு பள்ளியறை சேவை நடந்தது. விழாவில் சோகன்லால், பெருமாள் மேஸ்திரி, வினோத், சுந்தரமூர்த்தி உட்பட கலந்து கொண்டனர்.