செல்லிப்பாளையம் கோவில் கும்பாபிஷேகம்
துறையூர்: துறையூர் அடுத்த செல்லிப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மகாகணபதி, வெற்றிவேல் முருகன், செல்வகணபதி, மகா மாரியம்மன் பஜனை மடம் கோவில்களில் நூதன ஆலய கோபுரம் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. நேற்று முன்தினம் காலை கணபதி, லட்சுமி, நவகிரஹ ஹோமம் செய்து வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை செய்து தீபாராதனை நடந்தது. நேற்று காலை மகா கணபதி, வெற்றிவேல் முருகன் கோவிலில் காலை 7.30 மணிக்கு செல்வ விநாயகர், மகா மாரியம்மன், நவக்கிரஹங்கள், பஜனை மட கோவில் மூலஸ்தான கோபுர கலசத்தில், காலை, 10 மணிக்கு புனித நீர் ஊற்றி துறையூர் நந்திகேஸ்வரரன், மருவத்தூர் ராமமூர்த்தி அய்யங்கார் சர்வ சாதகம் செய்து வைத்தனர்.
விழாவில், கிராமத்தலைர் செல்வராஜ் தலைமையில், விழாக்குழுவினர் கடத்தில் புனித நீர் எடுத்து வந்தனர். விழாவில், எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, மாவட்ட பஞ்., தவைர் ராஜாத்தி, துறையூர் பெருமாள் மலை முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் விஜயராகவன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், ஒன்றிய கவுன்சிலர் இளவரசன், பஞ்., தலைவர் விஜயலட்சுமி தேவராஜன், வக்கீல் முகில், அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் உட்பட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இரவு, மகா கணபதி, வெற்றிவேல் முருகன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தனர். * துறையூர் அடுத்த கரட்டூரில் உள்ள செல்வ மாரியம்மன், செல்வ விநாயகர், கருப்பண்ண ஸ்வாமி கோவில்களில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பெரமங்கலம் அடுத்த மணியம்பட்டி மலையாயி அம்மன், வரதராஜ பெருமாள் பெரியண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.