திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா
ADDED :4048 days ago
சொரக்காய்பேட்டை : திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று சொரக்காய்பேட்டையில் நடந்தது. சொரக்காய்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த திங்கள்கிழமை, பகாசூரன் கும்பமும், வெள்ளிக்கிழமை காலை, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று, காலை 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நடந்தது. குருஷேத்திர யுத்தத்தில், துரியோதணன் கொல்லப்பட்டான்.தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில், கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில், திரளான பக்தர்கள் தீமிதித்தனர்.இரவு 8:00 மணியளவில், திரவுபதியம்மன் வீதியுலா எழுந்தருளினார். இன்று காலை தர்மருக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.