உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா துவக்கம்

ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா துவக்கம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் -காரமடை ரோடு சிவன்புரத்தில், அற்புதகெபி ஆரோக்கிய அன்னை சர்ச் உள்ளது. இதன் தேர்த்திருவிழா மற்றும் சிறுவர், சிறுமியருக்கு நற்கருணை, உறுதிப்பூசுதல் வழங்கும் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பாதிரியார்கள் மாதா படம் போட்ட கொடியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவை விசுவாசபுரம் மறை வட்ட அதிபர் விக்டர் சந்தியாகு தலைமையில் ஆடம்பர திருப்பலி நடந்தது. பாதிரியார்கள் நோபி, சவுரியப்பன், பால் சகாயராஜ், அலேக்சிசு ஆகியோர் பங்கேற்று திருப்பலியை நிறைவேற்றினர்.வரும் 13ம் தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு, பாதிரியார்கள் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்ற உள்ளனர். திருப்பலி முடிவில் தேர் பவனி நடைபெறுகிறது. 14ம் தேதி காலை 8.15 மணிக்கு, கோவை ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமை வகித்து, அன்னை திருநாள் திருப்பலியை நிறைவேற்றி, சிறுவர், சிறுமிகளுக்கு நற்கருணை, உறுதிபூசுதல் வழங்குகிறார்.அன்று மாலை, கூட்டுப்பாடற்பலியும், மாதா ஆடம்பர தேர் பவனியும், நற்கருணை ஆசீரும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை பாதிரியார் அலெக்சிசு மற்றும் பேரவையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !