சிவகங்கை பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4047 days ago
சிவகங்கை : சிவகங்கை அருகே சோழபுரம் ஸ்ரீதேவி, பூதேவி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.6ம் தேதி மாலை 4:15 மணிக்கு, அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, ஹோமத்துடன் கும்பாபிஷேக பணி துவங்கியது. அன்று மாலை 6 மணிக்கு யாகசாலை ஆரம்பம் மற்றும் பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு, யாகசாலை திருக்குடங்கள் புறப்பாடுடன், கும்பாபிஷேகம் துவங்கியது. காலை 7:15 முதல் 8:15 க்குள் அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், பெருமாளுக்கு தீபாராதனை, அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. வாசுதேவ பட்டர், கோபாலகிருஷ்ண பட்டர் கும்பாபிஷேக பூஜைகளை செய்தனர். சோழபுரம் கிராமத்தினர் விழா ஏற்பாட்டை செய்தனர்.