ஆதிவீரபத்திர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4046 days ago
கீழக்கரை : திருப்புல்லாணியில் ஆதி வீரபத்திரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கூட்டுவழிபாடுடன் பூஜை தொடங்கியது. ஆசார்யவர்ணம், கும்பஅலங்காரம், பூர்ணாகுதி, தீபாராதனையுடன் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவர் அபிஷேக ஆராதனைகளுடன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.