உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டலம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

கொண்டலம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் உள்ள பழமையான கொண்டலம்மன் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, நேற்று காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்குப்பின் புனித நீரால் கலசங்களுக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் கொண்டல்ராஜ், செயலர் வரதராஜ், பொருளாளர் தனபாலன் செய்தனர்.

* சேத்தூர் அருகேயுள்ள கோவிலூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன்,மாரியம்மன்,கிருஷ்ணர்,பாமா,ருக்மணி கோயில் கும்பாபிஷேக பூஜை மூன்று நாட்களாக நடந்தது.நேற்று காலை 8 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன்பின் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை விழா கமிட்டியார் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !