உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்தர் பாரதப் பெருமையைப் பாருக்குப் பறைசாற்றிய தினம்!

விவேகானந்தர் பாரதப் பெருமையைப் பாருக்குப் பறைசாற்றிய தினம்!

உலகில் இதுவரை நிகழ்ந்த சொற்பொழிவுகளில் மிகச் சிறந்தது எது? என்ற கேள்வி இன்டெலிஜென்ட் லைஃப் என்ற ஆங்கிலப் பத்திரிகையால் உலகப் புகழ்மிக்க ஆறு எழுத்தாளர்களிடம் கேட்கப்பட்டது. லண்டன், பி.பி.சி.யின் இந்திய நிர்வாகத் தலைவராக இருந்த திரு. மார்க் டல்லி, 1893-ஆம் ஆண்டில் சிகாகோவில் உலக சர்வ சமயப் பேரவையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையையே மிகச் சிறப்பானதாகத் தேர்ந்தெடுத்தார். சுவாமிஜியின் வாக்கு அன்றைக்கும் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளதாகக் கூறினார் திரு. டல்லி.

472 வார்த்தைகள் அடங்கிய தமது பெருமிதம் மிக்க முழக்கத்தினால் சுவாமிஜி பாரதப் பெருமையைப் பாருக்குப் பறைசாற்றினார். அதோடு, பிற சமயத்தினரின் ஆன்மாவையும் மீண்டும் ஒருமுறை உயிர்ப்பித்தார். இவ்வாறு சுவாமிஜி இந்தியாவின் ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் உயர்ந்த பீடத்தில் ஏற்றி, உலகம் அதைப் போற்றவும் ஏற்கவும் செய்தார். சுவாமி விவேகானந்தர் முன்னெடுத்துச் சென்ற பாரத கலாச்சார மற்றும் சமய மறுமலர்ச்சியைப் போற்ற செப்டம்பர் 11, 2014 அன்று

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் ஓர் அங்கமான விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நிகழ்ச்சி நிரல்:

நாள்: செப்டம்பர், 11, 2014,,வியாழன், நேரம் : மாலை 5.30 முதல் 8.00 மணி வரை. இடம்: விவேகானந்தர் இல்லம்.
5.30-6.00: பஜனை-என்.டி.ஜே.ஏ விவேகானந்த வித்யாலயா, சென்னை- 39.
6.00-6.10: சிகாகோ உரையை அனைவரும் சேர்ந்து வாசித்தல்
6.10-6.45: சிறப்புச் சொற்பொழிவு: திருமதி. பாரதி பாஸ்கர்
6.45-7.00: ஆசியுரை: ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ்
7.00-8.00: கிருஷ்ணசுவாமி அசோசியேட்ஸ் தயாரித்த சுவாமி விவேகானந்தர் சின்னத்திரைத் தொடரிலிருந்து சிகாகோ பிரசங்கக் காட்சி (தமிழ்)
செப்டம்பர் 11, 2014 வியாழன் அன்று காலை முதல் இரவு வரை விவேகானந்தர் இல்லத்தின் வெளிப்புறச் சுவற்றில் வைக்கப்படும் பேனரில் (140 அடி நீளம்) உங்களுக்குப் பிடித்த விவேகானந்தரின் ஒரு வீரமொழியை எழுதி உங்கள் பக்தியை வெளிப்படுத்துங்கள்.

முகவரி:  விவேகானந்தர் இல்லம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை- 5

தொலைபேசி: 044-28446188, மின்னஞ்சல்: mail@vivekanadahouse.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !