ஆரோக்கிய மாதா ஆலய பெருவிழாவில் தேர்பவனி!
ADDED :4382 days ago
புதுச்சேரி: நெல்லித்தோப்பு கஸ்துாரிபாய் நகர் புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு பெருவிழாவில் தேர்பவனி நடந்தது. நெல்லித்தோப்பு கஸ்துாரிபாய் நகர் புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு பெரு விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்து வந்த விழாவில் நேற்றுமுன்தினம் இரவு 7:00 மணிக்கு மறையுரையுடன் தேர்பவனி மற்றும் தேவநற்கருணை ஆசிர் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., ஆலய பங்கு தந்தையர்கள், விழா குழுவினர் மற்றும் கஸ்துாரிபாய் நகர் இறை மக்கள் கலந்து கொண்டனர்.