ஒட்டன்சத்திரம் கோயில்களில் கும்பாபிஷேகம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஒன்றியம் கே.அத்திக்கோம்பையில் உள்ள செல்வ விநாயகர், மந்த முனியப்பன், மகாமுனி மற்றும் பட்டாள ஈஸ்வரி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜையும், அன்று மாலை தீர்த்தம் அழைத்தல், முளைப்பாரி அழைத்தலும், இரவு கும்ப அலங்காரமும் நடந்தது. நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக வேள்வி, தீபாராதனை நடந்தது. பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
* கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே டி.கோம்பையில் சாத்தாரப்பன் சப்த கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விசேஷ யாகசாலை பூஜைகளுக்குப்பின் கும்பங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.