உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணையம்மன் கோவிலில் தேர்த்திருவிழா!

பண்ணையம்மன் கோவிலில் தேர்த்திருவிழா!

ராசிபுரம்: பண்ணையம்மன் கோவிலில், முப்பெரும் விழாவையொட்டி, நாளை திருத்தேர் விழா நடக்கிறது. ராசிபுரம் அடுத்த கொழிஞ்சிப்பட்டி பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவின், ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா, ஆவணி திருத்தேர் விழா, பொங்கல் விழா எனும் முப்பெரும் விழா, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, இன்று (செப்., 9) வரை, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. நாளை (செப்., 10), பண்ணையம்மன் ஸ்வாமி, திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 3 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். வரும், 11ம் தேதி பகல், 12 மணிக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, திருத்தேர் நிலை நிறுத்துதல், சத்தாபரணம் ஆகியவை நடக்கிறது. செப்., 12ம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !