செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4046 days ago
ஊத்துக்கோட்டை : செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். பெரியபாளையம் அடுத்த, 82 பனப்பாக்கம் கிராமத்தில் உள்ளது, செல்லியம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில், சிதிலமடைந்து காணப்பட்டது. பகுதிவாசிகள் பங்களிப்புடன், கோவில் புதுப்பிக்கும் பணிகள் முடிந்து, நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.இங்கு செல்லியம்மன், நாகாத்தம்மன், லட்சுமிகணபதி, கங்கையம்மன், வள்ளியம்மன், பவானியம்மன், துர்க்கை, சாய்பாபா, நவக்கிரங்கள் என, ஒவ்வொரு சுவாமிக்கு தனித்தனி சன்னிதிகள் அமைத்து, கணபதி பூஜை, கோ பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.