புனித அருளானந்தர் ஆலயத்தில் தேர்பவனி
ADDED :4045 days ago
திருவாடானை : திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலயத்தில் ஆரோக்கியஅன்னை பிறப்பு விழா ஆக., 29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, பாவசங்கீர்த்தனம், நோயாளிகள் மந்திரிப்பு போன்ற பல நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. கபரியேல்சம்மனசு, புனித அருளானந்தர், ஆரோக்கியமாதா ஆகிய தேர்கள் வலம் வந்தன.