பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி பவுர்ணமி பூச விழா!
ADDED :4046 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி பூச விழா சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கள்ளக்கு றிச்சி எம்.ஆர்.என்., நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஆவணி மாத பவுர்ணமி பூச விழா நடந்தது. பத்ரகாளியம்ம னுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. பெண் பக்தர்கள் குங்கும அர்ச்சனை செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.