சீனிவாச பெருமாள் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்
ADDED :4048 days ago
கடம்பத்துார் : கடம்பத்துாரில் உள்ள, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், நாளை, மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. கடம்பத்துாரில், 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில், தற்போது, 20 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, 60 ஆண்டுகளுக்கு பின் சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.இந்த சம்ப்ரோக்ஷணம், நாளை, காலை 8:45 மணிக்கு நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.
நாள் நேரம் நிகழ்ச்சி
செப்.10 காலை 9:00 மணி கணபதி ஹோமம்
மாலை 4:00 மணி யாகசாலை பிரவேசம்
செப்.11 காலை 8:45 மணி மகா சம்ப்ரோக்ஷணம்
மாலை 6:00 மணி சுவாமி திருவீதி உலா
செப்.13 மாலை 4:00 மணி விடையாற்றி உற்சவம்