ஜி.என்.பாளையம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :4049 days ago
புதுச்சேரி: குருவப்பநாயக்கன்பாளையம் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. வில்லியனுார் கொம்யூன் குருவப்பநாயக்கன்பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவிலின் கீழ் உள்ள அய்யனார், பொற்கலை பூரணி கோவில், வீரன் கோவில், நுழைவு வாயில் மண்டபத்திற்கான கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜையுடன் துவங்கியது. இன்று(10ம் தேதி) காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை (11ம் தேதி) காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, 8:30 மணிக்கு கும்பாபிஷேகம், 11.00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.