ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் பெருவிழா
குன்னூர் : பாய்ஸ்கம்பெனி தூய ஆரோக்கிய அன்னை தேவாலய பெருவிழா வண்ணமயமாக நடந்தது. பிரசித்தி பெற்ற அருவங்காடு பாய்ஸ்கம்பெனி தூய ஆரோக்கிய அன்னை தேவாலய ஆண்டு விழா, கடந்த 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தேவ அன்னையின் பிறந்த நாளான நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு, மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில், ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது. ஏராளமான குருக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், கேக் வெட்டப்பட்டது. பாய்ஸ்கம்பெனி புனித அன்னம்மாள் மெட்ரிக்., பள்ளி மாணவ பேண்டு வாத்திய குழுவினரின் இசை மீட்டனர். மாலை 5:00 மணிக்கு, திருப்பலியை தொடர்ந்து, வண்ண விளக்கு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், தேவ அன்னை பவனியாக, பாய்ஸ்கம்பெனி, கேட்டில பவுன்ட், அருவங்காடு கார்டைட் தொழிலக குடியிருப்புகள் வழியாக மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தார்.திரளான பக்தர்கள், கைகளில் மெழுகு திரிகளை பிடித்தபடி, மாதா பாடல்களை பாடியவாறு, பவனியில் பங்கேற்றனர். இரவு 9:00 மணிக்கு, நற்கருணை ஆசீருடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை, பங்கு குருக்கள் ராஜகுமாரன், சகாயதாஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். * இதேப்போல் ஊட்டி பாம்பேகேஷில் பகுதில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை தேவாலயத்திலும், சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.