வரசித்தி விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம்
ADDED :4050 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் வரசித்தி விநாயகர் கோவிலில் கணபதிஹோமம் நடந்தது. கண்டாச்சிபுரம் வரசித்தி விநாயகர் கோவில் ஆண்டு தினத்தையொட்டி கணபதிஹோமம் நடந்தது. மூலவர் வரசித்து விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அஷ்டபந்தனம் வைக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை தர்மகர்த்தா சுப்பிரமணியன், ஓதுவார் பழனியாண்டி செய்தனர்.