உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாணியந்தல் கோவில் தேர் திருவிழா

வாணியந்தல் கோவில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி: வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பல்வேறு கிராம பொதுமக்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது.தினம் சக்தி பிறப்பு, ரேணுகா  சரித்திரம், பெரியநாயகி, ஆதிலட்சுமி, மாரியம்மன், ஆதி, அம்மன்,  காத்தவராயன் ஆரியமாலா பிறப்பு மற்றும் சனீஸ்வரனுக்கு முத்து போடுதல்  நடந்தது. அம்மனுக்கு ஊரணி பொங்கல், கூழ் ஊற்றுதல், காத்தவராயன் சுவாமி ஆரியமாலாவிற்கு வளையல் போடுதல், திருக்கல்யாணம் சின்னான்  சுவாமி மோடி எடுத்தல், காத்தவராயன் கழுகு மரம் ஏறுதல் மற்றும் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை அலகுபோடுதல், அக்னிசட்டி  ஊர்வலம், காளி கோட்டை இடித்தல் நடந்தது. பகல் 2.30 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேரில் எழுந்தருள செய்தனர்.  பெண்கள் மாவிளக்கு வைத்து வழிபாடு செய்த பின் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !