உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்புலி அம்மன் கோவிலில் ஜாத்திரை உற்சவம் நிறைவு!

வேம்புலி அம்மன் கோவிலில் ஜாத்திரை உற்சவம் நிறைவு!

திருவள்ளூர்: வேம்புலி அம்மன் கோவிலில், 10 நாள் ஜாத்திரை உற்சவம், அம்மன் வீதி புறப்பாடுடன், நிறைவடைந்தது. திருவள்ளூர், தேரடி அரு÷ க, வேம்புலி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கிராம தேவதை கோவிலான இங்கு, கடந்த மாதம், 29ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன்  ஜாத்திரை உற்சவம் துவங்கியது.  தினமும் காலை 8:00  மணிக்கு அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது. கடந்த 6ம் தேதி, காலை 7:00  மணிக்கு, புஷ்ப அலங்காரமும், இரவு 8:00 மணிக்கு, பால் குடம் எடுக்கப்பட்டது. 10ம் நாள் உற்சவம், காலை 7:00 மணிக்கு,  அபிஷேகம், புஷ்ப  அலங்காரத்துடன் துவங்கியது.  அன்று நாள் முழுவதும் பக்தர்கள் அம்மனை  வழிபட்டனர். அன்றிரவு  அம்மன் வீதி புறப்பாடு வாண ÷ வடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !