உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே நாளில் நவமி, தசமி குழப்பம்: அரண்மனை ஜோதிடர்கள் தீர்வு!

ஒரே நாளில் நவமி, தசமி குழப்பம்: அரண்மனை ஜோதிடர்கள் தீர்வு!

பெங்களூரு : அபூர்வமாக, இம்முறை, நவமி, தசமி ஆகியவை, ஒரே நாளில் வருவதால், ஏற்பட்ட குழப்பத்தை, மைசூரு அரண்மனை ஜோதிடர்கள் மற்றும் ராஜகுரு ஆலோசனைப் படி, அரச குடும்பத்தினர் தீர்த்து கொண்டனர். வரும், அக்., 3ம் தேதி, வெள்ளிக்கிழமை, நவமி மற்றும் தசமி ஆகியவை, ஒரே நாளில் வருவதால், அன்றைய தினமே, மைசூரு அரண்மனையில், விஜயதசமி ஊர்வலம், வன்னி பூஜை நடக்கவுள்ளது. நவமி அன்று, ஆயுத பூஜையை முடித்து கொண்டபின், அதே நாளில், விஜய யாத்திரை சென்று, வன்னி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்ய அரண்மனை நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக, அட்டவணையும் வெளியிடப்பட் டுள்ளது. இதன்படி, அரண்மனை ஆயுத பூஜை, விஜயதசமி ஊர்வலம், வன்னி மர பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள், அதிகாலை 5:00 மணியில் இருந்து, இரவு 8:00 மணிக்குள் செய்து முடிக்கப்படும். ஜோதிடர்கள், ராஜகுரு ஆலோசனையின் பேரில், அரண்மனை நிகழ்ச்சிகளில், மேற்கண்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், ஜம்பு சவாரி தொடர்பாக, அரசு, இன்னும் தெளிவான முடிவை தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !