கோனேரி தீர்த்த குளக்கரையில் கும்பாபிஷேகம்!
ADDED :4044 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : திருவண்ணாமலை கோனேரி தீர்த்த குளக்கரையில் அரச மரத்தடியில் விநாயகர் கோயில் இருந்தது. இதில் மரம் வளர்ந்து விநாயகரை சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து கோயில் நிர்வாகம் மரத்தின் அடிப்பாகத்திலிருந்து விநாயகர் சிலையை எடுத்து தனியாக கோயில் அமைக்கப்பட்டது. இதையடுத்து அக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலையில் ஹோமங்களும், சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.