உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) சொத்து யோகம்!

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) சொத்து யோகம்!

பாச உணர்வுடன் நடக்கும் கன்னி ராசி அன்பர்களே!

குரு,செவ்வாய் இரு கிரகங்களும் மாதம் முழுவதும் நன்மை தருவர், மனதில் பக்தியுணர்வு மேம்படும். எடுத்த புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். புதிதாக சொத்து வாங்க யோகம் உண்டாகும். சுக்கிரன் செப். 26க்குப் பிறகு சாதக நிலைக்கு வருகிறார். இதனால் பெண்களால் நன்மை கிடைக்கும். அடிக்கடி விருந்து விழா என சென்று வருவீர்கள்.குடும்பத்தில் சில பிரச்னை உருவாக வாய்ப்புண்டு. விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் வகையிலும் கருத்துவேறுபாடு ஏற்படலாம். உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம். மருத்துவச் செலவும் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காது. பணியாளர்கள் சீரான பலனைக் காணலாம். அவ்வப்போது பணிச்சுமை கூடும். ஆனால் அதற்கான ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான பலன் காண்பர். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். ஆனால் செப். 26க்கு பிறகு இந்நிலை இருக்காது. புதிய ஒப்பந்தம் முயற்சியின் மூலம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சமூக நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர் அறிவுரையை ஏற்பதால் நன்மை உண்டாகும்.

விவசாயிகளுக்குக் கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: செப். 17, 18, 19, 20, 24, 25, 29, 30, அக்.  5, 6, 7, 8, 14, 15, 16, 17

கவன நாள்: அக். 9,10,11  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,9                  நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். சனியன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்குங்கள். தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !