உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) உறவினர் வருகை!

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) உறவினர் வருகை!

உழைப்பால் உயர்ந்திடும் துலாம் ராசி அன்பர்களே!

மாதத் தொடக்கத்தில் சுக்கிரனால் நன்மை உண்டாகும். சுக்கிரன் செப். 26ல் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறது. இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம். கேதுவால் நற்பலன் கிடைக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை நீங்கும்.  உறவினர் வருகையால்  நன்மை மேலோங்கும்.  மாதத் தொடக்கத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும்.  குடும்பத்தில் ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும். தம்பதியினரிடையே ஒற்றுமை மேம்படுவதால் மகிழ்ச்சி கூடும். உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். செவ்வாயால் களவு ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பணியாளர்கள் கடந்த காலத்தை விட அதிகமாக உழைக்க வேண்டியதுஇருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உத்தியோகத்தில் இடமாற்றம் வர வாய்ப்புண்டு.அதனால் பண விரயமும் ஏற்படும்.

கலைஞர்கள் மன மகிழ்ச்சியோடு காணப்படுவர். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு கிடைக்கும். செப்.26க்குப் பிறகு சுமாரான நிலையில் இருப்பர். சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தம் பெறலாம். அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காக கடினமாக பாடுபட வேண்டியதுஇருக்கும்.

மாணவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆசிரியர்களின் உதவியை கேட்டு பெறுவது அவசியம்.

விவசாயிகளுக்கு பயறு வகை, காய்கறி, சோளம், பழவகை, கிழங்குகள் போன்றவற்றில் அதிக மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகலாம்.

பெண்களுக்கு அக்கம்பக்கத்தினர்  அனுசரணையுடன் இருப்பர். மனம் போல் ஆடை, அணிகலன் கிடைக்க பெறுவீர்கள். கணவரோடு விருந்து விழா என்று சென்று மகிழ்வீர்கள்.

நல்ல நாள்: செப்.19, 20, 21, 22, 23, 26, 27, 28  அக். 1, 2, 7, 8, 9, 10, 11, 16, 17

கவன நாள்: அக்டோபர் 12, 13 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5, 6                 நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: வியாழனன்று தட்சிணாமூர்த்தி, சனியன்று ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். புதனன்று பசுவுக்கு தழை போடுங்கள். இதனால் உடல் நலனில் முன்னேற்றம் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !