சூளாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம்!
ADDED :4042 days ago
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி ஊராட்சி பாலப்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. பாலப்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங் கியது. தொடர்ந்து இரவு அம்மன் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 10ம் தேதி பால்குடம் எடுத்தல், ஊரணி பொங்கல் ஆகிய நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினர். மறுநாள் காத்தவராயன், ஆரியமாலை சுவாமிகளின் திருக் கல்யாணம் நடந்தது. நேற்று மதியம் 2:00 மணி யளவில் காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 3:00 மணியளவில் தேரோட்டம் நடந்தது.