காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ஏ. வெள்ளையாபுரத்தில் ரெட்டியார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட, காளியம்மன் கோயில் கும்பாபிஷேக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், நவசக்தி ஹோமம், தன பூஜை, கன்னிகா, பிரம்மச்சாரி பூஜைகள் நடந்தது. மாலை அனுக்ஞை, கும்ப அலங்காரம், முதல், இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை பூர்ணாகுதி, கடம் புறப்பாடுடன்,புனித நீர் மூலம் கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், காளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை, தீபாராதனைகள், அன்னதானமும் நடந்தது. மாலையில் வள்ளி திருமண நாடகம், இசை நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் தி.மு.க., அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஜெயவிலாஸ் தொழில் அதிபர் வரதராஜன், அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டியர் மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.