காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நாளை நடக்கிறது. இதையொட்டி, காலை, 6 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டலஷ்மி ஹோமம், பைரவர்ஹோமம், கோபூஜை மற்றும், 12 ராசி, 27 நட்சத்திரங்களை சேர்ந்தவர்களுக்கு பரிகார பூஜையும், 9 மணிக்கு கால பைரவருக்கு, 28 வகையான பல்வேறு அபிஷேகங்கள், ராஜ அலங்காரங்கள், தீபாராதனையும், இரவு, 10 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம், 1,008 கிலோ வரமிளகாய் யாகம், 108 கிலோ மிளகு யாகம் ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் கிருபாகரன் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். * காரிமங்கலம் கடைவீதியில் உள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நாளை பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.