ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பாலாலயம்!
ADDED :4044 days ago
கீழக்கரை : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் ராஜகோபுர விமானத்திற்கு பாலாலய (அபிஷேகம்) சம்ரோக்ஷணம் நடந்தது. செப்.13 ல், மாலை அனுக்கை பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. நேற்று காலை 10 மணிக்கு பூர்ணாகுதி நடைபெற்று துலா லக்கனத்தில் பாலாலயம் ஏழு கோபுர விமானங்களிலும் கோயில் பட்டாச்சாரியார்கள் நடத்தினர். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன், ஊராட்சி தலைவர் முனியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.