கெங்கவல்லி மாரியம்மன் தேர்த்திருவிழா
ADDED :4046 days ago
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கடம்பூர் பஞ்சாயத்து, முதலாவது வார்டில் உள்ள, மாரியம்மன் கோவிலில், கடந்த 12ம் தேதி, காப்பு கட்டுதல், சக்தி அழைத்தலுடன் விழா துவங்கியது. தினமும், கட்டளைதாரர்கள் சார்பில் ஸ்வாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்து வந்தது. நேற்று, காலை ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து, நேர்த்திக் கடனாக கோவில் வளாகத்தில் அலகு குத்தி பக்தர்கள் வீதி உலா வந்தனர். அலங்கரிக்கப்பட்ட தேர் வடம் பிடித்தல் துவங்கி, முக்கிய வீதி வழியாக ஸ்வாமி உலா வந்தது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.