பொன்னானி விஷ்ணு கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :4046 days ago
பந்தலூர் : பந்தலூர் அருகே பொன்னானி விஷ்ணு கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலம் நடந்தது. பந்தலூர் அருகே குந்தலாடி மற்றும் பெக்கி பாலகோகுலம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதில், பாம்பு மற்றும் அரச இலைகள் மீது கிருஷ்ணன் அமர்ந்திருப்பது போன்று சிறுவர்களை அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.ஊர்வலத்தில் செண்டை மேளத்துடன் பெண்கள், கிருஷ்ணர்-ராதை வேடமிட்ட சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மகா விஷ்ணு கோவிலில் சிறப்பு பூஜைகளும், ஆன்மிக சொற்பொழிவும் இடம்பெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாலகோகுல நிர்வாகிகள் செய்திருந்தனர்.