உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, பழையபேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை அருந்ததி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 12ம் தேதி துவங்கியது. அன்று காலை, அம்மனுக்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. 13ம் தேதி அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. மூன்றாவது நாளான நேற்று காலை, அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது, சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், கிருஷ்ணகிரி, காமராஜ் நகர், தாளாப்பள்ளி, கங்கலேரி, இட்டிக்கல்அகரம், பாலகுறி, மாதேப்பட்டி, பெல்லாரம்ப்ளளி, தானம்பட்டி, கொண்டேப்பள்ளி, தாசரப்பள்ளி, பாஞசாலியூர், பந்தாரப்பள்ளி, வசந்தப்பள்ளி, பில்லனகுப்பம், ராஜாஜி நகர், சோமார்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஊர் மணியக்காரர் முருகேசன், துணை மணியக்காரர் வெங்கடசாமி, மணியக்காரர் துரைராஜ், ஊர் தலைவர் மாதப்பன், துணைத் தலைவர் சுப்பிரமணி, செயலாளர் மாது, பொருளாளர் ராஜா, முருகன், ஊர் பூசாரி சின்னபிட்டா, ரமேஷ் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !