திருவதிகுன்னத்தில் கும்பாபிஷேகம்
ADDED :4046 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா திருவதிகுன்னம் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர், பாலமுருகன், துர்க்கையம்மன், பாண்டுங்கன் கோவில் திருப்பணிகள் செய்து ஜீர்ணோத்தாரன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 14ம்தேதி மாலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை சுவாமி கரிக்கோல ஊர்வலம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7 மணிக்கு கோபூஜை, வேதிகா பூஜை, நாடி சந்தானம், இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9.30 மணிக்கு கடம் புறப்பாடு, 9.35 செல்வவிநாயகர், பாலமுருகன், துர்க்கையம்மன் கோவில்கள், 10.20 மணிக்கு பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 10.30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.