சரபேஸ்வரர் கோவிலில் முதலாமாண்டு விழா
ADDED :4045 days ago
சேலம்; ஓமலூர் அடுத்த, சிந்தாமணியூர் செம்மாண்டப்பட்டி எல்லையில் குண்டுமணி கரடு சரபேஸ்வரர் கோவிலின் முதலாமாண்டு விழா, இன்று நடக்கிறது. ஓமலூர், சிந்தாமணியூர் செம்மாண்டப்பட்டி எல்லையில் குண்டுமணி கரடு சரபேஸ்வரர் கோவில் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு, இன்று காலை, சரபேஸ்வரர், பிரதியங்கர தேவி, வரமிளகாய் யாகம் நடக்கிறது. தொடர்ந்து, காலையில் அபிஷேக பூஜை, அன்னதானம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சிந்தாமணியூர், குண்டுமணி கரடு மற்றும் செம்மாண்டப்பட்டி, ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.