உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வானூர்: குதிரை பொன்னிமேடு கிராமத்தில் பொன்னிமாரியம்மன், முத்துமாரியம்மன் கோவிலுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. வானூர் ஒன்றியம் நெசல் ஊராட்சி குதிரை பொன்னிமேடு கிராமத்தில்முத்து விநாயகர், பொன்னி மாரியம்மன், முத்துமாரியம்மன் கோவிலுக்கு கடந்த 12ம் தேதி காலை 10.00 மணிக்கு அனுக்ஞை கணபதி பூஜை, மகா கணபதி ஹோமம், மாலை 6.00 மணிக்கு வாஸ்து சாந்தி தீபாராதனை நடந்தது. கடந்த 13ம் தேதி காலை 8.30 மணிக்கு கோ பூஜை, தன பூஜை, மாலை 6.00 மணிக்கு முதற்காலயாக பூஜை, 14ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் காலம் ஹோமம் நடந்தது. நேற்று காலை 10.00 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் முத்து விநாயகர், பொன்னிமாரியம்மன்,முத்துமாரியம்மன் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10.15 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திக்கு கும்பாபிஷேகம் மற்றும் காலை 11.00 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !