கே.குச்சிப்பாளையம் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4045 days ago
உளுந்தூர்பேட்டை: கே.குச்சிப்பாளையம் கிராம விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை முருகன், முத்துமாரியம்மன், கெங்கையம்மன் கோவில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா கொரட்டூர் ஊராட்சிக்குட்பட்ட கே.குச்சிப்பாளையம் கிராமத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை முருகன், முத்துமாரியம்மன், கெங்கையம்மன் கோவில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 14ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி பூஜை, மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குராரர்பணம், கலச பூஜை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு கோ பூஜை, ஹோமம், நாடீ சந்தானம், மஹா பூர்ணாஹூதி, மகா தீபாரதனை நடந்தது. காலை 10.15 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.