உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துபந்தல் விமானத்தில் வேணுகோபாலன் வீதியுலா!

முத்துபந்தல் விமானத்தில் வேணுகோபாலன் வீதியுலா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் மகோற்சவ விழா வேணு கோபாலன் வீதியுலாவுடன் துவ ங்கியது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று வேணுகோபாலன் பிரம்மோற்சவ விழா துவங்கியது.  காலை 6.00 மணிக்கு  ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் முத்துபந்தல் விமானத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. மதியம் அலங்கார  திருமஞ்சனம், சேவை சாற்றுமறை நடந்தது. இரவு அம்ச வாகனத்தில் வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச  ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !