தாடிக்கொம்பு கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவர் பூஜை!
ADDED :4374 days ago
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, மாலையில் ஆறுகால பூஜை நடந்தது. பைரவருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சணம், தேன், பல்வேறு வகை பழச்சாறுகள் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமஞ்சண பொடி பிரசாதம் வழங்கப்பட்டது.