கம்பேஸ்வர பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4074 days ago
குளித்தலை: கரூர் மாவட்டம், தோகைமலை கழுகூர் கம்பேஸ்வரத்தில் உள்ள சுயம்பு பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பகவத் அனுக்ஞை, புண்யாஹம், அங்குரார்பணம், பஞ்சகவ்ய பூஜை, கடஸ்தாபனம், கும்ப அலங்காரம், கோபுர கலசம் வைத்தல், கும்ப ஆராதனை, அலங்காரஸ்தாபனம், நாடிசந்தானம் உள்பட யாக சாலை பூஜைகள் நடந்தது. விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம் மஹா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ரெத்தினவேல், காந்திராஜன், நடேசன், சுந்திரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.