உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வங்கனுார் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி!

வங்கனுார் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி!

ஆர்.கே.பேட்டை: வங்கனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பெருமாள் வீதியுலா  நடந்தது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவில்களில் வங்கனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் கிருஷ்ண  ஜெ யந்தி உற்சவம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, மூலவர் மற்றும் அஷ்டலட்சுமிக்கு திருமஞ்சனம், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6:00  மணியளவில், உற்சவ பெருமாள், கிருஷ்ணர் கோலத்தில் வீதியுலா எழுந்தருளினார். வீதியுலாவில், வங்கனுார் பஜனை கோஷ்டியினர் பஜனை  பாடியபடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !