சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி!
ADDED :4072 days ago
கடலூர்: கடலூர், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பா லித்தார். கடலூர், புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள செங்கமலத் தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.இரவு 8:30 மணிக்கு தீபாராதனை முடிந்து, விசேஷ அலங்கா ரத்தில் மூலவர் பெருமாள் அருள்பாலித்தார். நேற்று 17ம் தேதி ராஜகோபால சுவாமி உபயநாச்சியார் சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் கோவில் புறப் பாடு நடந்தது. ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சாரியார், நிர்வாக அலுவலர் வெங்கடகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.